( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு மக்கள் வங்கி முகாமையாராக மீண்டும் திருநா.உமாசங்கரன் இன்று(15) திங்கட்கிழமை பதவியேற்றார்.
பதவியேற்பு நிகழ்வில் கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் சமய ஆராதனை நடத்தினார்.
இந்த நிகழ்வில் மக்கள் வங்கியின் அம்பாறை மாவட்ட உதவி பிராந்திய முகாமையாளர் ஜி.பம்பரதெனிய கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
அவர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு உத்தியோக பூர்வமாக நடைபெற்றது.
காரைதீவில் முகாமையாளராக பணியாற்றிய எஸ். கரிகாலன் கல்முனை மக்கள் வங்கி முகாமையாளராக இடமாற்றலாகி செல்கிறார்.
காரைதீவைச்
சேர்ந்த திருநா. உமாசங்கரன் முன்னர் ஆறரை வருட காலம் காரைதீவிலும் இறுதியாக திருக்கோவிலில் மூன்றரை வருட காலமும் முகாமையாளராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment