ஏறாவூர் சவுக்கடி தளவாய் பகுதியில் 16 வயது சிறுவனை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் ஆடைகளை அகற்றி மரத்தில் தலைகீழாக கட்டி தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து குறித்த சிறுவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment
Post a Comment