பாறுக் ஷிஹான்
அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கான அகில இலங்கை ரீதியான போட்டிப் பரீட்சையில் (தமிழ் – ஆங்கிலம்) சித்தியடைந்த இப்றாலெப்பை உபைத்துல்லாஹ் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாண மொழிபெயர்ப்பாளராக திங்கட்கிழமை (20) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
அம்பாறை மாவட்டம் மருதமுனை கிராமத்தைச் சேர்ந்த இவர், தற்போது மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் அதிபராகப் பணியாற்றி வருகிறார். சிறந்த ஆங்கில ஆசிரியராக நீண்ட கால அனுபவம் கொண்ட இவர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் தோற்றி சித்தி அடைந்திருந்தார்.
அத்துடன், இம்முறை நடைபெற்ற அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர் பரீட்சையில் தமிழ் - ஆங்கில மொழிமூலம் சித்தியடைந்த 9 பேரும் கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முறைப்படி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment