ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் விபத்து; மூவர் வைத்தியசாலையில்



 


கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிச் பயணித்த லொறி பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று இன்று (03) விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியாவுக்கு பயணித்த சிறிய ரக லொறி கட்டுப்பாட்டை இழந்து பிரதான விதியிலிருந்து விலகிச் சென்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், அதன் சாரதி மற்றும் மேலும் இருவர் கித்துல்கல பிராந்திய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக பொல்பிட்டிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.