தப்பி ஓடிய ‘கிராண்ட்பாஸ் லொக்கு நோனா’ எனும் முஹம்மது பௌசி ஹிதாயா!: போதைப் பொருள் சாம்ராஜ்யம் சுற்றிவளைப்பு
பிரபல போ**தைப்**பொருள் கடத்தல்காரியாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘கிராண்ட்பாஸ் லொக்கு நோனா’ எனப்படும் முஹம்மது பௌசி ஹிதாயா என்பவருக்குச் சொந்தமான 5.7 கோடி ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள பல சொத்துக்களை முடக்குவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் இணைக்கப்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த விசேட சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோத போ**தைப்**பொருள் கட**த்**தல் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டவை என விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
உஸ்வெட்டகியாவ பகுதியில் வசிக்கும் இந்த சந்தேக நபரான பெண்ணும் அவரது நெருங்கிய சகாக்களும் போதைப்பொருள் கடத்தல் மூலம் பாரியளவில் சொத்துக்களை குவித்து வருவதாக காவல்துறை அதிபருக்கு (IGP) இரகசிய முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது.
அதற்கமைய செயற்பட்ட புலனாய்வு அதிகாரிகள், 2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க பரந்தளவிலான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். தற்போது இச்சம்பவம் தொடர்பாக வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ம/உ பி 5241/24 என்ற இலக்கத்தின் கீழ் விபரங்கள் அறிக்கை செய்யப்பட்டுள்ளன.
இதன்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள தகவல்களின்படி:
முதலாவது சொத்து: வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ, புபுதுகம பகுதியில் 20 பேர்ச் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள சுமார் 5 கோடி ரூபா மதிப்புள்ள ஆடம்பர இருமாடி வீடு இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சொத்து: அத்துடன், அதே பிரிவின் நுகபே பகுதியில் அமைந்துள்ள 9.5 பேர்ச் நிலம், அங்குள்ள வீடு மற்றும் கடை அறை ஆகியவையும் சட்டவிரோத வருமானத்தைப் பயன்படுத்தி சொத்துக்களாகப் பெறப்பட்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இரண்டாவது சொத்தின் தோராயமான மதிப்பு சுமார் 70 இலட்சம் ரூபா என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் 7(1) பிரிவின் கீழ், உதவி காவல்துறை அத்தியட்சகர் ஜனக விதானகே அவர்களினால் இந்த இரு சொத்துக்களையும் ஏழு நாட்களுக்கு முடக்குவதற்கான (தடை செய்வதற்கான) உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத்தின் 8(2) பிரிவின்படி மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக, 8(1) பிரிவின் கீழ் நீதிமன்றத்திடமும் விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள ‘கிராண்ட்பாஸ் லொக்கு நோனா’ உள்ளிட்ட சந்தேக நபர்கள் தற்போது அப்பகுதியை விட்டு தப்பியோடியுள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்து வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறை விரிவான தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளது.
#Tamil #TamilNews


Post a Comment
Post a Comment