புதிய கடற்படைத் தளபதியாக டேமியன் பெர்னாண்டோ பொறுப்பேற்றார்



 


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் தலைமைத் தளபதியுமான அநுர குமார திஸாநாயக்கவால், வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக இன்று (01) நியமிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.


இதற்கு முன்னர், ரியர் அட்மிரலாக இருந்த அவர் வைஸ் அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றதையடுத்து, முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் காஞ்சன பானகொடவிடமிருந்து கடற்படைத் தளபதியின் வாளை கடற்படை மரபின்படி பெற்றுக்கொண்டார்.