அறுகம்பை உல்லை சுற்றுலாப்பிரதேசம் உல்லாச சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழிகின்றது



 


வி.சுகிர்தகுமார்           

அம்பாரை மாவட்டம் பொத்துவில் அறுகம்பை உல்லை சுற்றுலாப்பிரதேசம் சுறுசுறுப்பாக காணப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான உல்லாச சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழிந்ததை காணமுடிகின்றது.
சுற்றுலாப் பயணிகள் கடற்கரை பிரதேசத்தில் பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
 உலகப்புகழ் பெற்றதும், இயற்கையானதும், கடல் விளையாட்டிற்கு பொருத்தமானதுமானதும் பாதுகாப்பானதுமான உல்லைப்பிரதேசம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பிரதேசம் என்பதுடன் அனைத்து மக்களும் ஒன்று சேரக்கூடிய இடமாகவும் கருதப்படுகின்றது.
 வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ள இக்காலத்தில் உள்நாட்டு மக்களும் விடுமுறையை கழிப்பதற்காக நாட்டின் பல பிரதேசங்களிலிருந்து மக்களும் திரண்டிருந்த அதேவேளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன்  கடலில் நீராடியதுடன் விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.
சுற்றுலாப்பயணிகளின் வருகையால் ஹோட்டல்கள் யாவும் உல்லாசப்பயணிகளால் நிரம்பி வழிந்ததையும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.