(வி.ரி. சகாதேவராஜா)
பத்மநாபா அறிவாற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் பத்மநாபாவின் 26வது ஞாபகார்த்த தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் டிஸ்கோ-ரெட்ணம் விளையாட்டு கழகங்களின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலைக்குடா விநாயகர் விளையாட்டு கழகம் முதல் இடத்தை பெற்று பத்மநாபா சவால் கிண்ணத்தை தட்டிக் கொண்டது.
அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பணம் பரிசு வழங்கப்பட்டது.
மொத்தமாக 37 கழகங்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு முதலைக்குடா விநாயகர் விளையாட்டு கழகமும் குருந்தையடி முன்மாரி டென் ஸ்டார் விளையாட்டு கழகமும் தெரிவாகி இருந்ததன.
இறுதிப்போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் டிஸ்கோ தலைவர் டெய்ன் வின்சன் தலைமையில் நேற்று (12) மாலை இடம்பெற்றது.
இரு அணிகளும் குறித்த நேரத்தில் கோல்கள் போடாததன் காரணமாக பெனால்டி வழங்கப்பட்டது.
அதில் வினாயகர் அணிவெற்றி 4-1 என்ற ரீதியில் பெற்று சவால் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
இவ் நிகழ்வின் அதிதிகளாக
முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தோழர் சிறிதரன் (சுகு) அரசியல் ஆய்வாளரும் பத்மநாபா அறிவாற்றல் கழகம் ஸ்தாபகருமானதோழர் சோலையூரான் (ஜோதி) டான் தொலைக்காட்சியின் குழுமத்தின் பணிப்பாளர் எஸ்.குகநாதன், ஐரோப்பாவில் வசிக்கும் சமூகசெயற்பாட்டாளர்களான தோழர் உதயன் பாஸ்கரன், தோழர் சிராப் ராஜ், பொறியாளர் சந்தானம் சங்கர், பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் தலைவர் வினோத் காந்த்,கல்விப்பிரிவு பொறுப்பாளர் மோகனதாஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்
முதலிடம் பெற்ற விநாயகர் அணிக்கு இரண்டு லட்ச ரூபாவும் இரண்டாம் இடம் பெற்ற டென் ஸ்டார் அணிக்கு ஒரு லட்ச ரூபாவும் மூன்றாம் இடத்தை பெற்ற நடரா ஜானந்தபுரம் சித்தி விநாயகர் விளையாட்டு கழகத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது.


Post a Comment
Post a Comment