Social TV-யின் 6ஆவது ஆண்டு விழா



 


நூருல் ஹுதா உமர்


சமூக அக்கறையுடனான ஊடகப் பணியின் மூலம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள Social TV நிறுவனத்தின் 6ஆவது ஆண்டு நிறைவு விழா, சனிக்கிழமை (11) நிந்தவூரில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

நிறுவனத்தின் நிறுவனரும் பணிப்பாளருமான என்.எம்.முஹம்மத் சிறாஜ் அவர்களின் நெறிப்படுத்தலில் Social TV-யின் ஊடக ஆலோசகரும், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளருமான எம்.ஏ.சி.எம்.றியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ரியாஸ் ஆதம் கலந்து கொண்டதுடன், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.லத்தீப், கிழக்கு மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை சேவைகள் திணைக்கள ஆணையாளர் எம்.பி.முஹம்மத் சுஃப்யான், கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கரைப்பற்று மாநகர உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ்,  நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.