அரசியலமைப்பின் 22-வது திருத்தத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், விசாரணைக்கு




 உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க வகைசெய்யும் அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22-வது திருத்தத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 'சிறப்புத் தீர்மான மனுக்களை' (Special Determination petitions) விசாரிப்பதற்காக, தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்துள்ளார்.


தலைமை நீதிபதி தலைமையில் அமையவுள்ள இந்த அமர்வில், நீதிபதிகள் அச்சலா வெங்காப்புலி, அர்ஜுன ஒபயசேகர, சம்பத் அபயகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இடம்பெறுவர்.


இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (1) நடைபெறவுள்ளது