நீதிமன்ற விசாரணைகளில் தாமதத்தைக் குறைக்க புதிய செயலி அறிமுகம்



 


இலங்கையின் நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் வகையில், திறந்த நீதிமன்ற விசாரணைகளில் சாட்சியங்களைப் பதிவு செய்ய புதிய செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


குரல்வழித் தட்டச்சுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாட்சியங்களைத் துல்லியமாகப் பதிவுசெய்யும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு சாட்சியின் குரலையும் தனித்தனியாக அடையாளம் காணும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.


வழக்கு அறிக்கைகள் மற்றும் சட்டக் குறிப்புகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களால் வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், இந்த செயலி நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்