இந்தியா , ஒடிசாவின் பாராதீப் கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில், பனாமா கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை வங்காள விரிகுடாவில் மூழ்கியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
கப்பலில் 24 பணியாளர்கள் இருந்தனர். ஒடிசாவிலிருந்து இரும்புத் தாதுவை ஏற்றிச் சென்ற அக்கப்பல், இன்று ஒடிசா கடற்கரையிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, இரண்டு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர், மற்றவர்களைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 24 பணியாளர்களில் 20 பேர் சீன நாட்டவர்கள், மூவர் மியான்மரைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி கூறினார்.
எம்வி ஓஷன்-வின்னர் என்ற கப்பல் சுமார் 1700 டன் இரும்புத் தாதுவை ஏற்றிச் சென்றது.
ஆபத்து அழைப்பு வந்ததை அடுத்து, இந்திய கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன. மீட்புப் பணிக்கு உதவுவதற்காக, அருகிலுள்ள மற்ற கப்பல்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
“மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக, இந்திய கடலோரக் காவல்படை அந்தமானில் இருந்து கூடுதல் படகுகளை அனுப்பி வருகிறது. கப்பல் ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”
விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்துக் கேட்டதற்கு, அவை இன்னும் தெரியவில்லை என்று பொலிஸ் அதிகாரி கூறினார். பாராதீப் துறைமுகமோ அல்லது இந்திய கடலோரக் காவல்படையோ இதுகுறித்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
.webp)

Post a Comment
Post a Comment