சுவிட்ஸர்லாந்தின் லுசானேவில் நடைபெற்ற 2026 டைமண்ட் லீக் போட்டியில் 88.14 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து ருமேஷ் தரங்க முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 88.05 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பெற்றதுடன், இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 9 சென்டிமீற்றர்களாக அமைந்தது.
இதனிடையே, ருமேஷ் தரங்க இந்த பருவத்தில் ரோம் டைமண்ட் லீக்கில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து இலங்கை தேசிய சாதனையையும் டைமண்ட் லீக் சாதனையையும் பதிவு செய்திருந்தார்.
மேலும், 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 89.75 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், பொதுநலவாயப் போட்டிகளில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார்.


Post a Comment
Post a Comment