வரட்சியால் 7 மாவட்டங்களில் 84,545 பேர் பாதிப்பு



 


நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 6 மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இதன் மூலம் 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 பேருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதிகளவான மக்கள் மொனராகலை மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 11,074 குடும்பங்களைச் சேர்ந்த 35,639 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும், மட்டக்களப்பில் 9,547 குடும்பங்களைச் சேர்ந்த 28,253 பேருக்கும், அம்பாறையில் 2,823 குடும்பங்களைச் சேர்ந்த 8,847 பேருக்கும், பொலன்னறுவையில் 683 குடும்பங்களைச் சேர்ந்த 2,646 பேருக்கும், இரத்தினபுரியில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.