ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் தற்போது விளையாட்டு சுற்றுப்போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால் மைதானத்திற்கு வருகை தரும் வீரர்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், மைதானத்தின் நுழைவாயில் மற்றும் சுற்றுமதில் பகுதிகளை சுத்தம் செய்யுமாறு விளையாட்டு கழகங்கள் தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
விளையாட்டு கழகங்களின் கோரிக்கையை ஏற்று, தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன் அவர்களின் பணிப்பின் பேரில் குறித்த பகுதிகள் உடனடியாக ஜேசிபி கனரக இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டன. இதன் மூலம் மைதானத்தின் நுழைவாயில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் சீரமைக்கப்பட்டு, வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு கழகங்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்த தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன் அவர்களுக்கு விளையாட்டு கழகங்கள் தமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளன.


Post a Comment
Post a Comment