சுரக்ஷா மாணவர் காப்புறுதித்
திட்டம் 2026/27 ஆம் ஆண்டிற்கு
அமுல்படுத்தல்
- மாணவர்களின் மருத்துவச் சிகிச்சை மற்றும் பரிசோதனை நிதியுதவிகள் பெருமளவு அதிகரிப்பு
சுகாதாரப் பிரச்சினைகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுத்து, தடையற்ற கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்கும் நோக்கில் 'சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம்' அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசாங்க பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் உதவிபெறும் விசேட பாடசாலை மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.
இத்திட்டத்தை மேலும் விரிவாக்கி, இலங்கை இன்சூரன்ஸ் கூட்டுத்தாபன ஜெனரல் லிமிடெட் (Sri Lanka Insurance Corporation General Ltd) நிறுவனத்துடன் 2026-09-01 முதல் 2027-08-31 வரையிலான காலப்பகுதிக்குத் திருத்தப்பட்ட புதிய சலுகைகளுடன் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய காப்புறுதிச் சலுகைகள்:
* செவிப்புலன் கருவிகள் (Hearing Accessories): பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக் கட்டணங்களுக்கு ரூ. 75,000 வரை காப்பீடு வழங்கல்.
* நாட்பட்ட நோய்கள்: நாட்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) மற்றும் நாட்பட்ட மூட்டு அழற்சி (Chronic Inflammatory Arthritis) நோயாளிகளான மாணவர்களின் நீண்டகால மருந்துச் செலவுகளுக்கு ரூ. 20,000 வரை நிதியுதவி.
* விசேட பரிசோதனைகள்: தோல் புற்றுநோய் பரிசோதனை, உறுப்பு மாற்றத்திற்குப் பிந்தைய நிணநீர் மண்டலக் கோளாறு (PLTD) பரிசோதனை, எலும்புப்புரை (Osteoporosis) பரிசோதனை, ஹெபடைடிஸ் B, C மற்றும் எச்.ஐ.வி (HIV) பரிசோதனைகளுக்காக 20,000 ரூபா வரை செலுத்துகை.
* புற்றுநோய் மற்றும் தீவிர சிகிச்சைகள்: புற்றுநோய் சிகிச்சைகளுடன் தொடர்புடைய பரிசோதனைகள், இடுப்பு, தோள்பட்டை மற்றும் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் PET Scan செலவுகள் தீவிர நோய் கவரேஜின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
* விபத்து இழப்பீடு: கல்வி அமைச்சு மற்றும் கல்வி அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்படும் பாடசாலைக்கு உள்ளேயான அல்லது வெளியேயான கல்விச் சுற்றுலாக்கள், விளையாட்டு நிகழ்வுகளின் போது ஏற்படும் விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனமுறுதலுக்கு ரூ. 100,000 வரை இழப்பீடு.
பிரதமர் சமர்ப்பித்த இப்போஜனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்விச் செய்திகளுக்கு பின்தொடருங்கள்
https://whatsapp.com/channel/0029VbBzT7C05MUe1VUALx3g


Post a Comment
Post a Comment