திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்ஹபுர, 04ஆம் கட்டை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 8.00 மணிக்கும் 9.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், இலக்கம் 54, சிங்ஹபுர, 04ஆம் கட்டை, திருகோணமலை என்ற முகவரியில் வசித்து வந்த மவுண்ட் வியூ கெஸ்ட் ஹோட்டலின் உரிமையாளரான டபிள்யூ.கே. நிமல் கொஸ்கொல்ல (56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த கொலையை ஏதேனுமொரு குழுவினர் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்துல் சலாம் யாசீம்


Post a Comment
Post a Comment