சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன், நன்கொடை



 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


மனிதநேயப் பணியின் ஓர் அங்கமாக, சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் (International Human Rights Global Mission) அமைப்பின் அம்பாறை மாவட்ட அங்கத்தவர்கள், மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் அமைந்துள்ள புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு (Cancer Care Hospice) நேரடியாகச் சென்று நன்கொடை வழங்கினர்.

அமைப்பின் தேசிய தலைவர் ஏ.ஆர். அமீர்கான் அவர்களின் வழிகாட்டலின் கீழ், அம்பாறை மாவட்ட அங்கத்தவர்களின் பங்களிப்புடன் இந்த மனிதநேயப் பணி முன்னெடுக்கப்பட்டது. சனிக்கிழமை (29) இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு, புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு நன்கொடை வழங்கி வைத்தனர். 

இதன்போது, சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் அமைப்பின் அம்பாறை மாவட்ட அங்கத்தவர்கள் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள நிலைமைகள் மற்றும் நோயாளர்களுக்கான பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிந்துகொண்டனர். மனிதநேயத்தை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இவ்வாறான சமூகப் பணிகள்,நோயாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.