.
பாறுக் ஷிஹான்
அம்பாறை நவகிரிஆறு வனப் பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பெருமளவிலான கள்ளச்சாராயம் மற்றும் உபகரணங்களுடன் ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை 2:00 மணியளவில் இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றதுடன் 148 லீற்றர் கோடா, 7.5 லீற்றர் கள்ளச்சாராயம் மற்றும் காய்ச்சும் உபகரணங்கள் பக்கிஎல்லை பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன்போது அங்கு தற்காலிகமாக தங்கியிருந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைக்குப் பிறகு ஆகஸ்ட் 20 அன்று அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்


Post a Comment
Post a Comment