காத்தான்குடியில் உயிரிழந்த மட்டக்களப்பு இளைஞன் வீட்டுக்கு சென்ற பள்ளி நிருவாகத்தினர்,நிதி உதவி வழங்கி வைத்தனர்

காத்தான்குடியில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த  மட்டக்களப்பு  இளைஞன் டிலெக்ஸன் வீட்டுக்கு சென்ற புதிய காத்தான்குடி நூறானிய்ய ஜூம் ஆப் பள்ளி நிர்வாகம் ஆறுதல் தெரிவிப்பு நிதியுதவியும் வழங்கி வைப்பு.

 எம் எஸ் எம் நூர்தீன் 

புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா  பகுதியில் கடந்த(29) புதன்கிழமையன்று சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கே.டிலெக்ஸன் எனும் வேலையில்லா   பட்டதாரி  ஆவார்.

சரியான வேலை இன்மை காரணமாக பகுதி நேரமாக தச்சு கூலி தொழிலாளியாக இவர் வேலை செய்து வந்த நிலையில் இந்த துரதிஸ்டவசமான சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் புதிய காத்தான்குடி நூறானிய்ய ஜூம் ஆப் பள்ளி வாயல் பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றதால் பள்ளி வாயல் நிர்வாகம் அதன் தலைவர் பாயில் ஹாஜியார் தலைமையில் நேற்று (01) சனிக்கிழமை மாலை இவரின் வீடு தேடிச் சென்று குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது 

அதே போல கட்டாரில் தொழில் புரியும் காத்தான்குடியைச் சேர்ந்த சுஜா தலைமையிலான Q Cargo Qatar  நிறுவனத்தினாலும் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் புதிய காத்தான்குடி நூறானிய்ய ஜூம் ஆப் பள்ளி வாயல் செயலாளர் யசீர் அரபாத் B.A பள்ளி வாடல் இமாம் அல் ஹாபிழ் மெளலவி முஸ்தகீம் பாலாஹி உட்பட பள்ளி வாயல் நிருவாகிகள் பள்ளி வாயல் இமாம்கள் Q Cargo நிறுவன உத்தியோகத்தர்கள் சர்வமத செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

சமூக நல்லிணக்கத்துக்கும் இன நல்லுறவு க்கும் மிகவும் எடுத்துக் காட்டான ஒரு மனிதாபிமான உதவி அப்பகுதியிலுள்ள இந்து ஆலயத்தின் குருக்கள் இதன் போது கருத்து தெரிவித்ததுடன் பள்ளி வாயல் நிர்வாகத்தின் முன் மாதிரியான செயற்பாடுக்கும்  பாராட்டு தெரிவித்துள்ளார். டிலெக்ஸன் வீட்டுக்கு சென்ற புதிய காத்தான்குடி நூறானிய்ய ஜூம் ஆப் பள்ளி நிர்வாகம் ஆறுதல் தெரிவிப்பு நிதியுதவியும் வழங்கி வைப்பு.

 எம் எஸ் எம் நூர்தீன் 

புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா  பகுதியில் கடந்த(29) புதன்கிழமையன்று சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கே.டிலெக்ஸன் எனும் வேலையில்லா   பட்டதாரி  ஆவார்.

சரியான வேலை இன்மை காரணமாக பகுதி நேரமாக தச்சு கூலி தொழிலாளியாக இவர் வேலை செய்து வந்த நிலையில் இந்த துரதிஸ்டவசமான சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் புதிய காத்தான்குடி நூறானிய்ய ஜூம் ஆப் பள்ளி வாயல் பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றதால் பள்ளி வாயல் நிர்வாகம் அதன் தலைவர் பாயில் ஹாஜியார் தலைமையில் நேற்று (01) சனிக்கிழமை மாலை இவரின் வீடு தேடிச் சென்று குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது 

அதே போல கட்டாரில் தொழில் புரியும் காத்தான்குடியைச் சேர்ந்த சுஜா தலைமையிலான Q Cargo Qatar  நிறுவனத்தினாலும் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் புதிய காத்தான்குடி நூறானிய்ய ஜூம் ஆப் பள்ளி வாயல் செயலாளர் யசீர் அரபாத் B.A பள்ளி வாடல் இமாம் அல் ஹாபிழ் மெளலவி முஸ்தகீம் பாலாஹி உட்பட பள்ளி வாயல் நிருவாகிகள் பள்ளி வாயல் இமாம்கள் Q Cargo நிறுவன உத்தியோகத்தர்கள் சர்வமத செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

சமூக நல்லிணக்கத்துக்கும் இன நல்லுறவு க்கும் மிகவும் எடுத்துக் காட்டான ஒரு மனிதாபிமான உதவி அப்பகுதியிலுள்ள இந்து ஆலயத்தின் குருக்கள் இதன் போது கருத்து தெரிவித்ததுடன் பள்ளி வாயல் நிர்வாகத்தின் முன் மாதிரியான செயற்பாடுக்கும்  பாராட்டு தெரிவித்துள்ளார்.