இலங்கை ரயில்வே திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள், எதிர்வரும் செப்டெம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
ரயில் பொதுமுகாமையாளரின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரயில் பொதுமுகாமையாளரை பதவியில் இருந்து நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.டி.எம். சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், செப்டெம்பர் 17ஆம் திகதி நள்ளிரவுக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்காவிட்டால், 48 மணி நேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment