நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 74 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க் கொள்ளளவு 34 சதவீதமாக குறைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நீர்ப்பாசனப் பணிப்பாளர் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மற்றும் 48 மணிநேரங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும், பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை பகுதியில் அதிகபட்சமாக சுமார் 40 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் 25 முதல் 30 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
அத்துடன், மாதுருஓயா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாட்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெரும் போகச் செய்கைக்குத் தேவையான அதிக மழைவீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.webp)

Post a Comment
Post a Comment