பாறுக் ஷிஹான்
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் பாலமுனையை பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனை - 08 அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் சமது முபாரிஸ் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment
Post a Comment