நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை காவல்துறையினரால் பலவந்தமாக அகற்றம்!
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அண்மையில் புதிதாக நிறுவப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலையை இன்றைய தினம் (செப்டம்பர் 27) பொலிஸார் பலவந்தமான முறையில் உடைத்து அகற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்அனுமதியின்றி நிறுவப்பட்டமை மற்றும் அது தொடர்பில் எழுந்த சட்ட சிக்கல்கள் காரணமாக, பொலிஸார் குறித்த சிலையை அகற்றியுள்ளதுடன், அதற்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#Jaffna #jaffnatamil


Post a Comment
Post a Comment