ரயில் பொது முகாமையாளரை பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றியளித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததைப் போன்று பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையிலான சதி வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளும் நோக்கம் தமது சங்கத்திற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்


Post a Comment
Post a Comment