( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண புதிய இராணுவ பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவைச் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (02.09.2026) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
எதிர்கால நடவடிக்கைகள்
இந்தச் சந்திப்பு ஒரு சுமுகமான கலந்துரையாடலாக அமைந்ததுடன், கிழக்கு மாகாணத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
கிழக்கு மாகாண மக்களின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நலனுக்காக, அரசுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.


Post a Comment
Post a Comment