🛑தலைமன்னாரில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அரிய வகை பச்சை ஆமை: வனவிலங்கு அதிகாரிகளினால் தீவிர சிகிச்சைக்காக ஏற்பாடு!
தலைமன்னார் ஆதாம் பாலம் கடல்சார் தேசிய பூங்காவிற்குட்பட்ட ஓல்ட் பியர் பகுதியில், தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அரிய வகை பெண் பச்சை ஆமை ஒன்று (Chelonia mydas) இன்று மாலை வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
ஆதாம் பாலம் கடல்சார் தேசிய பூங்கா அதிகாரிகளும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பலனாக இந்த உயிரினம் காப்பாற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இந்த ஆமை சுமார் 6 அடி 2 அங்குல நீளமும், 5 அடி 4 அங்குல அகலமும் கொண்டதாகும்.(மஜீட் )
காயமடைந்துள்ள இந்த ஆமைக்குத் தேவையான மேலதிக மருத்துவ சிகிச்சைகளை கிளிநொச்சி வனவிலங்கு கால்நடை வைத்திய அதிகாரி நாளை மேற்கொள்ளவுள்ளார்.
சிகிச்சை முடிவடைந்ததும், இந்த ஆமையை மீண்டும் பாதுகாப்பாகக் கடலில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூங்கா அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment
Post a Comment