முறக் கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் இன்று




 மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக் கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கிரான்குளத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர், கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிரான்குளத்தைச் சேர்ந்த தங்கராசா சதுஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் சந்திவெளி பொலிஸார், தனியார் பேருந்தின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.