நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதுடன், பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுத்தல் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரும் இணைந்து முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த சட்டமூலம், எல்லை கடந்த திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தை தேசிய மட்டத்தில் வலுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மேலும், சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் பயனுள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி கடுமையான குற்றங்களைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவது இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து பொதுமக்களையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்படவுள்ளன.


Post a Comment
Post a Comment