இணையவழியில் ரயில் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதி




 ரயில் பயணிகள் இணையவழி (Online) ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, பயணிகள் www.pravesha.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று தங்களுக்கு தேவையான ரயில் பயணச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ள முடியும்.


அத்துடன், ‘Pravesha’ கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) ஊடாகவும் ரயில் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதன் மூலம் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளை முன்கூட்டியே இணையவழியில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.