நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆவது சபையின் 13ஆவது சபைக் கூட்டம் (21.10.2026) சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, எதிர்வரும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்களிலிருந்து பிரதேச மக்களைப் பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, வடிகால்கள் மற்றும் நீர்வழிப் பாதைகளை விரைவாக துப்புரவு செய்தல், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களை அடையாளம் காணுதல், நீர் வடிந்தோடுவதற்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்றுதல், தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் அவசரநிலைகளில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
மேலும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், அமைப்புக்கள் மற்றும் துறை சார்ந்தவர்களுடன் ஒருங்கிணைந்து அனர்த்த அபாயங்களைக் குறைப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், பிரதேச மக்களின் தேவைகள் மற்றும் நலன்களை முன்னிறுத்தி, சபையின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் உறுப்பினர்களின் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
.jpg)

Post a Comment
Post a Comment