காரைதீவில் கதிரவன் கலைக்கழகத்தின் 196 ஆவது பட்டிமன்றம்



 நூருல் ஹுதா உமர்


தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, காரைதீவு பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில், கதிரவன் கலைக்கழகம் வழங்கிய 196ஆவது பட்டிமன்றம் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் இன்று காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

விசேட அதிதிகளாக காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், எம்.என்.எம். ரணீஸ் மற்றும் எஸ். குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், காரைதீவு பிரதேச சபைச் செயலாளர் வனிதா டேவிட் அமிர்தலிங்கம், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தர மாணவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், மாணவர்களின் அறிவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்துதல், கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கும் ஆற்றலை வளர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இப்பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பட்டிமன்றங்கள் மூலம் மாணவர்கள் பல்வேறு சமூக விடயங்கள் தொடர்பில் ஆழமாகச் சிந்திக்கவும், பிறரது கருத்துக்களைச் செவிமடுத்துப் புரிந்துகொள்ளவும், தமது கருத்துக்களை ஆதாரங்களுடன் முன்வைக்கவும் வாய்ப்புக் கிடைக்கின்றது.

கதிரவன் கலைக்கழகத்தின் 196ஆவது பட்டிமன்றமாக இடம்பெற்ற இந்நிகழ்வு, வாசிப்பு மற்றும் அறிவுசார் செயற்பாடுகளை ஊக்குவிப்பதில் நூலகங்களும் கலை இலக்கிய அமைப்புகளும் ஆற்றக்கூடிய பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது.