சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவின் தண்டனைக்கு எதிராக, இலங்கை மற்றும் சவூதி சட்டக் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் வயர் நீதிமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகளின் சிறப்புக் குழுவினருக்கும் சவூதி சட்டத்தரணிகளுக்கும் இடையே பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டதோடு, சவூதிக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட்டின் ஒருங்கிணைப்புடன் இந்த மேன்முறையீடு தயாரிக்கப்பட்டது.
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாகவே இந்த சட்ட நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
புனித முஹம்மது நபி அவர்களை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் சிவராசாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் கீழமை நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. எனினும், வழக்கின் மேல்முறையீட்டின் பேரில் அந்தத் தீர்ப்பு மாற்றப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த மேன்முறையீட்டைத் தயாரிப்பதில் உதவுவதற்காக இலங்கையிலிருந்து ஒரு சிறப்புக் சட்டக் குழு சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டது.

Post a Comment
Post a Comment