பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா விளக்கமறியலில்



 


யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு பெண்ணை நோக்கித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


கைதான அவர் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


இதன்போது, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.