வரவு செலவுத் திட்டத்தில் மகிந்தவுக்கு 62 வீதம் மைத்திரிக்கு 12 வீதம்




அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு 12 வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு மொத்தமாக 377 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சுக்கு 306 பில்லியன் ரூபா, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களுக்காக 69 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 2015 ஆம் ஆண்டுக்காக தாக்கல் செய்திருந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பொறுப்பின் கீழ் இருந்த அமைச்சுக்களும் அவருக்கும் சேர்த்து மொத்தமாக வரவு செலவுத்திட்டத்தில் 62 வீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்காக ஆயிரத்து 652 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்காக 283 பில்லியன் ரூபாவும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்காக ஆயிரத்து 160 பில்லியன் ரூபாவும் பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சுகளுக்காக 144 பில்லியன் ரூபாவும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுக்கு 53 பில்லியன் ரூபாவும் ஜனாதிபதி செலவுகளுக்காக 10 பில்லியன் ரூபாவும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிர்நீத்த உறவுகளை நினைவு கூற முடியும்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூற முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
லங்காசிறி செய்தி சேவையுடனான நேர்காணலில்  அவர் இதனைக் குறிப்பிட்டார். 
தனது உயிர்நீத்த உறவுகளுக்கு தனிநபர்களாக சென்று அஞ்சலி செலுத்தவோ, விளக்கேற்றவோ முடியும் எனவும், குழுக்களாக சென்று பொது இடங்களில் அஞ்சலி செலுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது பொதுபலசேனா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  எம்முடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.