ரஷ்ய போர் விமானம் துருக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
துருக்கியர்களை விசா இல்லாமல் தம் நாட்டிற்குள் அனுமதிக்கும் நடைமுறையை நிறுத்தப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
துருக்கியின் வான்பரப்பில் அத்துமீறி பிரவேசித்ததாகக் கூறி ரஷ்ய போர் விமானம் ஒன்றை துருக்கி போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.
பாரசூட் மூலம் தரையிறக்கப்பட்ட அந்த விமானத்தின் இரண்டு விமானிகளில் ஒருவரை சிரியப் படைகள் சுட்டுக் கொன்றனர். மற்றொருவரை ரஷ்யா பத்திரமாக மீட்டு விட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து ரஷ்யாவுக்கும், துருக்கிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
தனது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உரிய எச்சரிக்கை விடுத்தும் விமானத்தை தரை இறக்காததால் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி பதில் அளித்துள்ளது.
இதை ஏற்க மறுத்துள்ள ரஷ்யா துருக்கியுடனான உறவை துண்டித்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
துருக்கி நாட்டினருக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லா பயணத்தை வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்போவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

Post a Comment
Post a Comment