கொலராடோ கொலைகளுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை



அமெரிக்காவின் கொலராடோ ஸ்ப்ரிங்ஸ் நகரில் துப்பாகிதாரி ஒருவர் மூவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கான காரணம் குறித்து தாங்கள் இன்னும் விசாரித்து வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
Image copyrightReuters
Image captionதுப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
நகரிலுள்ள குடும்பக் கட்டுப்பாடு மையம் ஒன்றில் இத்துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றன.
அச்சம்பவத்தில் இரண்டு பொதுமக்களும், காவல்துறை அதிகாரி ஒருவரும் அந்தத் துப்பாக்கிதாரியால் கொல்லப்பட்டனர்.
பின்னர் காவல்துறையினருடன் பல மணி நேரங்கள் நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகளுக்கு பின்னர் அந்த நபர் சரணடைந்தார்.
அந்த நபர் 51 வயதான ராபர்ட் லீவிஸ் டியர் என்றும், அவர் வடக்கு கரோலைனாப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
அவருக்கும் அந்த மையத்தை நடத்திவந்த பிளாண்ட் பேரண்ட்ஹுட் எனும் அமைப்புக்கும் தொடர்புகள் ஏதாவது இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.
கருக்கலைப்புக்கு எதிரானவர்களிடமிருந்து அந்த அமைப்பு ஏராளமான எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்தித்திருந்தது.