இந்திய விமான விபத்தில் 10 பேர் பலி





இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய எல்லைப் பாதுகாப்பு படைக்குச் சொந்தமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எல்லை ரோந்துப் படையினரை ஏற்றிச் சென்ற விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் ட்வார்க்கா மாவட்டத்தில் சுவர் ஒன்றில் மோதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள்
குறிப்பிடுகின்றன.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த வருடங்களில் விமான போக்குவரத்து மார்க்கம் பாதுகாப்பானதாக கருதப்பட்டு வந்ததுடன் இதன் காரணமாக பல தனியார் தரப்பினருக்கும் விமான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்தது.
2010 ஆம் ஆண்டில் கடைசியாக பாரிய விமான விபத்து மங்களூரில் இடம்பெற்றிருந்தது. இந்த விபத்தில் 160 பேர் வரை கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.