(எஸ்.ரி.ஜமால்டீன்)
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் 18 பேருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் தலா ஆயிரம் (1000.00) ரூபா அபராதம் விதித்தார்.
இன்று புதன்கிழமை (23) மன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்படி அபராதம் விதித்தார்
ச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை-8ஆம் பிரிவு பிரதேசத்தில் உள்ள தேனீர் கடை ஒன்றிற்கு பின்னால் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அக்கரைப்பற்று பொலிசாருக்கு நேற்று (22) ,இரவு 8 மணியளவில்; கிடைத்த தகவலையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் விஜயராஜா தலைமையிலான பொலிஸ்குழுவினர் நடத்திய சுற்றிவளைப்பின் போதே 18 பேரும் கைது செய்யப்பட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் ,இருந்து காட்ஸ் பக்கட், பணம், இருக்கைக்காக பயன் படுத்தப்பட்ட விரிப்பு என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

