இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற வடக்கு பகுதிகளில் இதுவரை 2 இலட்சம் கண்ணி வெடிகள் வரை அகற்றப்பட்டுள்ளதாக உலகில் மிகப் பெரிய கண்ணிவெடி அகற்றும் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னணி இந்திய ஊடகம் ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டளவில் இலங்கையை கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாற்றுவதாக ஹலோ ட்ரஸ்ட் அமைப்பின் தலைமை அதிகாரி டேமியன் ஓ பிரைன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிதி கிடைக்காமையின் காரணமாக சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக டேமியன் ஓ பிரைன் தெரிவித்துள்ளார்.
90சதவீதமான நிலப்பரப்பு இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் காட்டுப் பகுதிகள் மற்றும் வயல் பகுதிகளில் மாத்திரம் அகற்றப்படவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

