சிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ரவூப் ஹாபிஸ் தனது எம்.பியை பதவியை விரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிய வருகிறது.
தேசியப் பட்டியல் மூலம் தெரிவான இவரின் இடத்திற்கு கட்சியின் செயலாளரான எம்.ரீ ஹஸன் அலி நியமிக்கப்படவுள்ளதாகவும் நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதேவேளை, கட்சியின் தவிசாளரான பஷீர் ஷேகு தாவூதுக்கும் தேசியப் பட்டியல் எம்.பி பதவியை வழங்குவது குறித்தும் கட்சி தலைமை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
