சவுதி அரேபியத் தேர்தலில் கணிசமான பெண்கள்





பெண்கள் வாக்களிக்கவும், போட்டியிடவும் முதற்தடவையாக அனுமதிக்கப்பட்ட சவுதி அரேபிய தேர்தலில், குறைந்த பட்சம் 17 பெண்களாவது உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய சரியா சட்டங்களைக் கொண்ட, அந்த நாடு, சவுதி அரச குடும்பத்தால் ஆட்சி செய்யப்படுகின்றது.