2 ஆயிரம் ரூபா அடுத்த வருடம் முதல், அடிப்படைச் சம்பளத்தில்




அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் 2 ஆயிரம் ரூபா அடுத்த வருடம் முதல், அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


அண்மையில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு 10, 000 ரூபாவினால் உயர்த்தப்பட்டது. இந்த கொடுப்பனவில் இரண்டாயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது.

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்படாது. நிதி ஒதுக்கத்துடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டமொன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும். 
2000 ரூபா அடிப்படை வேதனமாக சேர்க்கப்படும்

வாகன வருமான பத்திரம் 25 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைக்கப்பட உள்ளது.

புகைப் பரிசோதனை சான்றிதழ கட்டணம் 5000 ரூபாவிலிருந்து தற்காலிக அடிப்படையில் ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.

வாகன குத்தகை மதிப்பீடு கட்டணம் கார்களுக்கு 5000 ரூபாவும், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவும் அறவீடு செய்யப்படும்.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் 2500 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது.

இந்த சம்பள உயர்வு எதிர்வரும் மே மாதம் முதல் கட்டாயம் அமுல்படுத்தப்பட உள்ளது என பிரதமர் இன்று ஆற்றிய விசேட உரையில் தெரிவித்துள்ளார்