
மலையக தொழிலாளர்களுக்கு
சலுகைகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலேயே கிடைக்கின்றது. இதனால் இவ் அரசாங்கத்தை எவரும் வீழ்த்திடாமல் இருக்க மலையக மக்கள் பாதுகாக்க வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள 100 தோட்டங்களுக்கான தோட்டத்தில் வாழும் மக்களுடைய விசேட தினங்களுக்காக பாவிப்பதற்கான 30 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் 13.12.2015 அன்று நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் வைத்து மக்களிடம் கையளிக்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
