ஆப்ரிக்காவின் சாட் ஏரித் தீவில் மூன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்





ஆப்ரிக்கவிலுள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான சாட் ஏரியில் இருக்கும் தீவு ஒனறில், மூன்று பேர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

Image captionநைஜிரியாவை ஒட்டிய நாடுகளில் போக்கோ ஹராமின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இதில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர்.
லூலூ ஃபௌ எனும் அந்தத் தீவில் நடைபெறும் வாராந்திரச் சந்தையை இலக்கு வைத்தே இந்தத் தக்குதலகள் நடத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
Image captionபன்னாட்டுப் படைகள் போக்கோ ஹராமை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராமால் கடந்த மாதம் அந்தப் பிராந்தியத்தில் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சூழலில், சாட் நாட்டு அரசாங்கம் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.
போக்கோ ஹராமை எதிர்த்து சமாளிக்க அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டுப் படைகளில் சாட் நாட்டுப் படைகளும் உள்ளன.
அண்டை நாடான நைஜீரியாவிலேயே போக்கோ ஹராமின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளன.