அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம்:ஒபாமா கவலை



அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாராம் குறித்து அதிபர் ஒபாமா ஆழமான கவலையை வெளியிட்டுளார். நாட்டு மக்களுக்கான தனது வாராந்திர உரையில் இது தொடர்பில் அவர் பேசினார்.


Image copyrightEPA
Image captionஅமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்

சில தினங்களுக்கு முன்னர் கலிஃபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில், படையினர் பயன்படுத்தும் வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, அமெரிக்காவில் ஆபத்தானவர்களின் கைகளில் துப்பாக்கிகள் கிடைப்பது மிகவும் சுலபமானது என்ற துக்ககரமான விஷயத்தை நினைவுபடுத்துவதாக, அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

Image copyrightAP
Image captionகலிஃபோர்னியா படுகொலைகளை நடத்திய தம்பதியினர்

கலிஃபோர்னியா துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து, கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை முதல் முறையாக, ஆசிரியர் தலையங்கத்தை முதல் பக்கத்தில் பிரசுரித்துள்ளது.
அந்தத் தலையங்கக் கட்டுரையில், அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம் தொற்றுநோய் போலத் பரவியுள்ளது, அது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அனைவருக்கும் ஆயுதங்கள் சுலபமாகக் கிடைப்பதை தடைசெய்ய வேண்டும் எனவும் நியூயார்க் டைம்ஸின் தலையங்கம் கோரியுள்ளது.