இணையத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை - ஐநா எச்சரிக்கை




மொபைல் தொலைபேசி மற்றும் இணையம் போன்றவை சக்தி வாய்ந்த கருவிகள் மட்டுமல்ல அவை பெரிய ஆயுதங்களாகவும் இருக்கக்கூடும். ஐ.நா மன்றம் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உருவாகும் வன்முறையைப் பற்றி எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. இந்த வன்முறை உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் போலவே அதே அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது . குறிப்பாக உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தொழில் நுட்பம் நுழையக்கூடிய இந்த நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஐ.நா கூறுகிறதுதொலைதொடர்பு இணைப்பு என்பது எல்லா இடங்களிலும் கிடைக்கும் தற்போதைய காலகட்டத்தில், தொழில்நுட்பமும், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது ஊறு விளைவிக்கும் ஒரு கருவியாகிவிட்டது என்று எச்சரிக்கிறது ஐ.நா மன்றம்

உலகெங்கும் ஏற்கனவே பல கோடிக்கணக்கான பெண்கள் , அவர்கள் பெண்களாக இருப்பதலாயே , பாலியல் ரீதியான வீட்டிற்குள் நடக்கும் வன்முறைக்கு இலக்காகிறார்கள்.
இப்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி என்பது அத்தகைய வன்முறையை செய்ய புதிய வழிகளை தந்துள்ளது.
இது இந்தப் பிரச்சனை குறித்து "உலக அளவில் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம்" என்கிறது ஐ.நா.








.