பொலன்னறுவையில் பெய்துவரும் கடும்மழை காரணமாக, மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியின் கல்லெல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், பொலன்னறுவை- சோமாவதிய வீதியும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடும் மழையால், பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகளும் கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவைளை, மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.
