பிரேசில்: பழங்கால ரயில் நிலையம் தீயில் எரிந்து நாசம்





பிரேசில் தீ விபத்தில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ரயில் நிலையம் சேதமடைந்துள்ளது.
பிரேசிலின் சா பாலோ நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ரயில் நிலையத்தின் சில பகுதிகள் எரிந்து நாசமாயின.

அந்த ரயில் நிலையத்தில் போர்ச்சுக்கீசிய மொழியின் வரலாற்றை ஆவணப்படுத்தியிருந்த மிகப் பிரபலமான ஒரு அருங்காட்சியகமும் செயல்பட்டுவந்தது. இந்த விபத்தில் அந்த அருங்காட்சியகமும் பெருமளவில் சேதமடைந்தது.
ஸ்டேஷன் ஆஃப் லைட் எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த ரயில் நிலையத்தை பிரிட்டிஷ்காரர்கள் கட்டினர். இந்தத் தீ விபத்தில் இதன் கூரை முழுவதுமாக எரிந்து போனது.

புகழ்பெற்ற பிரிட்டிஷ் ரயில் நிலைய வடிவமைப்பாளர் சார்லஸ் ஹென்றி டிரைவர் இந்த நிலையத்தை வடிவமைத்தார்.
பிரேசிலில் காஃபி விளைச்சல் உச்சகட்டத்தை எட்டியிருந்த காலகட்டத்தில், காஃபிக் கொட்டைகளை சாண்டோஸ் நகருக்கு எடுத்துச் செல்வதற்காக 1901ஆம் ஆண்டில் இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது.
ரயில் நிலையங்களை வடிவமைப்பதில் புகழ்பெற்ற பிரிட்டிஷ்காரரான சார்லஸ் ஹென்றி டிரைவர் இந்த நிலையத்தை வடிவமைத்தார்.
கடுமையாக மழை பெய்த நிலையிலும் இந்தத் தீ பல மணி நேரங்களுக்கு விடாமல் எரிந்தது. இந்த விபத்தில் ஒரு தீயணப்பு வீரர் பலியானார்.
கடுமையாக மழை பெய்த நிலையிலும் இந்தத் தீ பல மணி நேரங்களுக்கு விடாமல் எரிந்தது.

விபத்தையடுத்து, இந்த ரயில் நிலையத்திற்கு அடுத்து இருந்த புறநகர் ரயில் நிலையம் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டது.
இந்த ரயில் நிலையம் கட்டப்பட்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ் ரயில் நிலையங்கள எப்படி இருந்தனவோ, அதே பாணியில்தான் இதன் மணிக்கூண்டும் கூரையும் வடிவமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருக்கும் ஃபைன்டர்ஸ் ஸ்ட்ரீஸ் நிலையத்தைப் பார்த்து வடிவமைக்கப்பட்டதாகவும் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.