பாணதுறை - வாழைத்தோட்டம் பிரதேசத்திலுள்ள வர்ணப்பூச்சு (பெயின்ட்) உற்பத்தி தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இடம்பெற்ற இந்த விபத்தில், காயமடைந்தவர்கள் பாணதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று காலை 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

